கொரோனா தீவிரத்தை குறைக்கும் ஃபைசர் மாத்திரைகள் – ஆய்வில் தகவல்..

கொரோனா பெருந்தொற்றுக்கு எதிரான ஃபைசர் மாத்திரைகள், தீவிர கொரோனா அறிகுறிகள் தென்படும் நபர்களின் மருத்துவமனை தேவையையும் உயிரிழப்பையும் 89 சதவிகிதம் குறைப்பதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அதன் ஆய்வக பரிசோதனை நிறுத்தப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவை தலைமையிடமாகக்கொண்டு இயங்கும் மெர்க் நிறுவனம், ரிட்ஜ்பேக் பயோதெரபியூடிக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்த கொரோனா மாத்திரைகளை காட்டிலும் இது பயனுள்ளதாக இருப்பது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. இருப்பினும், ஆய்வு முடிவுகளை ஃபைசர் நிறுவனம் இன்னும் முழுமையாக வெளியிடவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, ஃபைசர் நிறுவனத்தின் பங்குகள் 13 சதவிகிதம் அதிகரித்து 49.47 அமெரிக்க டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. இதற்கு நேர்மாறாக, மெர்க் நிறுவனத்தின் பங்குகள் 6 சதவிகிதம் குறைந்து 84.69 அமெரிக்க டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது.

ஃபைசர் நிறுவனத்தின் மாத்திரை, ரிடோனாவிர் என்ற பழைய வைரஸ் தடுப்பு மாத்திரையுடன் கலந்து வழங்கப்படுகிறது. அவசர கால பயன்பாட்டிற்கான அனுமதி பெறுவதற்காக இதன் இடைக்கால ஆய்வு முடிவுகள் அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்திடம் சமர்பிக்க திட்டமிட்டுள்ளதாக ஃபைசர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Next Post

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா நிலவரம்..

Sat Nov 6 , 2021
தமிழகத்தில் கொரோனா பாதிப்பானது படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது.தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 862 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்றைய நிலவரப்படி 10,588 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்று பாதிப்பில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 1,009 பேர் குணம் அடைந்துள்ளனர்.தமிழகத்தில் மொத்த பலி எண்ணிக்கை 36,214 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு […]
district-wise-corona-updates-06-11-2021
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய