செவ்வாய் கிரகத்தில் பதிவான முதல் ஒலி : நாசா வெளியீடு..

வரலாற்றில் செவ்வாய் கிரகத்தில் ஒலியை பதிவு செய்வது இதுவே முதல் முறையாகும் .

நாசாவின் அட்லஸ் விண்கலம் மூலமாக பெர்சிவரன்ஸ் விண்கலம் கடந்தாண்டு விண்ணில் செலுத்தப்பட்டது.பெர்சிவரன்ஸ் விண்கலமானது கடந்த 18 ஆம் தேதி செவ்வாய்க்கிரகத்தின் மேற்பரப்பை அடைந்தது குறிப்பிடத்தக்கது .இந்த விண்கலத்தில் 19 பிரத்யேக கேமெராக்கள் பொருத்தப்பட்டுள்ளது .இந்த கேமெராக்கள் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் புவிக்கு அனுப்பப்பட்டு வருகிறது .இதன் மூலம் செவ்வாயின் நில அமைப்பு, அங்குள்ள பாறைகள் தொடர்பான பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளன.

இதனைத் தொடர்ந்து ,செவ்வாய் கிரகத்தில் காற்றோட்டத்தின் காரணமாக வெளிப்படும் ஒலியை,விண்கலத்தில் உள்ள இரண்டு மைக்ரோபோன்கள் பதிவு செய்துள்ளன .இது உலக வரலாற்றில் அறிய நிகழ்வாக காணப்படுகிறது .மேலும் ,இந்த பெர்சிவரன்ஸ் விண்கலமானது தனது ஆய்வு பணியை 2 ஆண்டுகளுக்கு தொடர உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

Next Post

பிளஸ் 2 பொதுத் தேர்வை எழுதவுள்ள தனித்தேர்வர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் : அரசுத் தேர்வுகள் இயக்கம் அறிவிப்பு ..

Fri Feb 26 , 2021
பிளஸ் 2 பொதுத் தேர்வை எழுதவுள்ள தனித்தேர்வர்கள் இன்று முதல் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுத் துறை அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு தனித்தேர்வராக பிளஸ் 1 தேர்வெழுதி தேர்ச்சி பெற்ற மற்றும் பெறாத மாணவர்கள் அனைவருமே ,தற்போது மே (2021) மாதத்தில் நடைபெறவுள்ள பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு,தனித்தேர்வர்கள் இணையதளம் மூலம் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்குனர் சி .உஷாராணி தெரிவித்துள்ளார் . […]
plus-2-exam
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய