
செவ்வாய் கிரகத்தில் பெர்சிவரென்ஸ் ரோவர் தரையிறங்கும்போது, அதில் பொருத்தப்பட்டிருந்த கேமராக்கள் மூலம் வீடியோ எடுக்கப்பட்ட காட்சியை நாசா முதல் முறையாக வெளியிட்டது.
நாசா விண்வெளி ஆராய்ச்சி மையமானது ,செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதறக்காக பெர்சிவரென்ஸ் விண்கலத்தை கடந்த ஆண்டு விண்ணுக்கு அனுப்பியது.இந்நிலையில் பெர்சிவரென்ஸ் ரோவர் விண்கலமானது ,செவ்வாய் கிரகத்தில் தனது ஆய்வு பணியை மேற்கொண்டது.ரோவர் வாகனத்துடன் மிகச்சிறிய ரக ஹெலிகாப்டரும் செவ்வாய் கிரகத்தில் களமிறக்கப்பட்டுள்ளது.
செவ்வாய் கிரகத்தில் பெர்சிவரென்ஸ் ரோவர் விண்கலத்தை தரையிறக்கும் போது எடுக்கப்பட்ட முதல் வீடியோவை நாசா வெளியிட்டுள்ளது.
செவ்வாய்க் கிரகத்தில் ரோவர் இறங்கும்போது, அதில் இணைக்கப்பட்டிருந்த கேமராக்களில் 7 கேமராக்கள் மட்டும் இயக்கப்பட்டு இந்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.