
அமெரிக்கா விண்வெளி நிறுவனத்தால் ,செவ்வாய்கிரகத்தை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட பெர்சிவரன்ஸ் விண்கலம் இன்று செவ்வாயில் தரையிறங்குகிறது .
செவ்வாய்க்கிரகத்தில் உள்ள கால நிலையை அறியவும் ,உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளனவா என்பதை கண்டறியவும் மற்றும் பிற ஆய்வுகளை மேற்கொள்வதற்காக கடந்த வருடம்( 7 மாதங்களுக்கு முன்பு) விண்கலம் ஒன்றை நாசா அனுப்பியது.நாசாவால் அனுப்பப்பட்ட அந்த விண்கலம் சுமார் 300 மில்லியன் மைல்களை கடந்து இன்று செவ்வாய்க்கிரகத்தின் மேற்பகுதியை வந்தடைந்துள்ளது .
செவ்வாய்க்கிரகத்தின் மேற்பகுதியை அடைந்த விண்கலத்திலிருந்து ,பெர்சிவரென்ஸ் விண்கலம் தனியாக பிரிந்து ஜெசிரோ கிரேட்டர்(Jezero crater) எனும் பள்ளத்தில் சென்று தனது ஆய்வு பணியை நடத்த உள்ளது .பெர்சிவரென்ஸ் விண்கலத்துடன் Ingenuity என்கிற ஸ்பேஸ் ஹெலிகாப்டரும் இணைந்து ஆய்வு மேற்கொள்ளவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Ingenuity :
Ingenuity என்பது நாசாவால் தயாரிக்கப்பட்ட ஒரு ஸ்பேஸ் ஹெலிகாப்டர் ஆகும்.Ingenuity செவ்வாய்க்கிரகத்தில் பெர்சிவரென்ஸ் விண்கலத்துடன் இணைந்து ஆய்வு பணிகளை மேற்கொள்வதற்காக தயாரிக்கப்பட்டதாகும் .இதன் எடை 1 கிலோ 80 கிராம் ஆகும் .
Ingenuity ஹெலிகாப்டர் ஆனது நிமிடத்திற்கு 2 ,400 முறை எதிரெதிர் திசைகளில் சுழலும் தன்மை கொண்டது . இது பூமியில் சுழலும் ஹெலிகாப்டரின் இறக்கைகளை விட 8 மடங்கு அதிவேகத்தில் சுழலும் திறன் கொண்டது.