நீட் தேர்வு முடிவை வெளியிட அனுமதி – உச்சநீதிமன்றம் உத்தரவு..

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த மாதம் 12-ந்தேதி நடந்தது. இத்தேர்வை சுமார் 16 லட்சம் பேர் எழுதினார்கள்.

இந்நிலையில் 2 மாணவர்கள் தங்களது வினாத்தாள் மற்றும் விடைத்தாள் ஆகியவற்றில் உள்ள எண்கள் தவறாக பொருத்தப்பட்டதாகவும், கண்காணிப்பாளர்கள் தவறு செய்துள்ளனர் என்றும் தெரிவித்தனர்.மேலும் இந்த 2 பேரும் தங்களுக்கு நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிடக்கோரி மும்பை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த மனுவை விசாரித்த மும்பை ஐகோர்ட்டு 2 மாணவர்களுக்கும் நீட் மறுதேர்வு நடத்த வேண்டும் என்றும், அதன் பின்னரே நீட் தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து தேசிய தேர்வு முகமை உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை அளித்தது .இதில் கண்காணிப்பாளர்கள் தவறு செய்துள்ளதை தேசிய தேர்வு முகமை ஒப்புக்கொண்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் இரண்டு மாணவர்களுக்காக 16 லட்சம் மாணவர்களுக்கான முடிவுகளை தாமதப்படுத்த முடியாது. இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடையில்லை என்று நீதிபதி இன்று உத்தரவிட்டனர்.மேலும் அந்த மாணவர்களின் நலன்களை சமநிலைபடுத்த வேண்டும். தேர்வு நாளில் ஏற்பட்ட குழப்பத்தால் நேரத்தை இழந்த 2 மாணவர்களுக்கு என்ன செய்வது என்பது குறித்த திட்டம் பற்றி தேசிய தேர்வு முகமை கோர்ட்டில் தெரிவிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

Next Post

எட்டாம் வகுப்பு தேர்வு எழுதும் தனித்தேர்வர்கள் கவனத்திற்கு..

Thu Oct 28 , 2021
2021 நவம்பர் -ல் நடைபெறும் தேர்வை எழுத விண்ணப்பித்துள்ள எட்டாம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான தேர்வுக் கூட அனுமதிச்சீட்டை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. எட்டாம் வகுப்பு தனித் தேர்வினை அரசுத் தேர்வுத் துறையின் சேவை மையங்களில் (சர்வீஸ் சென்டர்) ஆன்லைன் மூலமாக 08.11.2021 அன்று விண்ணப்பித்த தனித்தேர்வர்கள், 29.10.2021 (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 2.00 மணி முதல் http://www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில் […]
8th-class-individuals-written-exam-2021
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய