
ரஷ்யாவின் ஸ்புட்னிக் லைட் தடுப்பூசி ஒரு டோஸ் கொண்ட தடுப்பூசியாகும்.கடந்த ஜூலை மாதம் ரஷ்யாவில் மேற்கொள்ளப்பட்ட முதல் மற்றும் இரண்டாம் கட்ட மருத்துவ பரிசோதனை முடிவுகள் மற்றும் தரவுகளை டாக்டர் ரெட்டிஸ் நிறுவனம் சமர்ப்பித்து, அவசரகால பயன்பாட்டிற்கு அனுமதி வழங்குமாறு கோரிக்கை விடுத்திருந்தது.
ஸ்புட்னிக் லைட் தடுப்பூசியின் மூன்றாம் கட்ட பரிசோதனையை நடத்த ஹைதராபாத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கும் டாக்டர் ரெட்டி ஆய்வகங்களுக்கு கடந்தாண்டு ஒப்புதல் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது .
தடுப்பூசி குறித்து வெளியான அறிக்கையில், தடுப்பூசி செலுத்தப்படும் பட்சத்தில் எத்தனை காலம் வரை நோய் எதிர்ப்பு சக்தி உடலில் நீடிக்கும் என்பதை அறிந்து கொள்ளும் வகையில் பாதுகாப்பு, நோய் எதிர்ப்பு சக்தி, அதன் ஆயுள்காலம் குறித்த தரவுகள் சமர்பிக்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தடுப்பூசி 79.4 சதவிகிகம் செயல்திறனை கொண்டுள்ளதாக ஸ்புட்னிக் லைட் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கு ஒப்புதல் வழங்கும்பட்சத்தில், இந்தியாவில் பயன்பாட்டுக்குவரும் முதல் ஒரு தவணை தடுப்பூசி என்ற பெருமையை ஸ்புட்னிக் லைட் தடுப்பூசி பெறும்.