தமிழ் மொழியில் பொறியியல் பாடங்களை கற்பிக்க AICTE அனுமதி..

தமிழ் மொழியில் பொறியியல் பாடங்களை வரும் கல்வியாண்டு முதல் கற்பிக்க அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அனுமதி அளித்துள்ளது.மேலும் தமிழ் உள்ளிட்ட 7 பிராந்திய மொழிகளில் பொறியியல் பாடங்களை கற்பிக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கல்லூரிகளில் பொறியியல் பாடங்கள் தற்போது ஆங்கிலத்தில் மட்டுமே நடத்தப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக பள்ளிகளில் தாய் மொழியில் கல்வி பயின்று வரும் மாணவர்கள் ஆங்கிலத்தில் மட்டுமே பொறியியல் படிக்க வேண்டும் என்ற நிலை இருந்து வந்தது.

இதன் காரணமாக கிராமப்புற மாணவர்கள் பொறியியல் பட்ட படிப்பில் சேர அதிக ஆர்வம் காட்டுவதில்லை.இதனை கருத்தில் கொண்டு அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் (AICTE ) தமிழ், இந்தி, தெலுங்கு, குஜாராத்தி, மராத்தி, கன்னடம் உள்ளிட்ட 7மொழிகளில் வரும் கல்வியாண்டு முதல் பொறியியல் பயிலலாம் என்று அனுமதி அளித்துள்ளது.

இதன்காரணமாக ஆங்கிலத்தில் மட்டுமே இதுவரை இடம் பெற்றிருந்த பாடங்கள் தாய் மொழியிலும் இடம்பெறும். பொறியியல் பாடங்களை அந்தந்த பிராந்திய மொழிகளில் மொழி மாற்றவும் அகில இந்திய தொழில் நுட்ப கவுன்சில் திட்டமிட்டுள்ளது. மேலும் 11 இந்திய மொழிகளிலும் பொறியியல் பாடங்களை கொண்டு வரவும் அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் முடிவு செய்துள்ளது. இதனைத் தொடர்ந்து மாணவர்கள் அதிகம் பொறியியல் படிப்பில் சேர வாய்ப்பு உள்ளது என AICTE தகவல் ஒன்றை தெரிவித்துள்ளது.

Next Post

இந்தியாவில் இன்று ஒரே நாளில் 2,11,298 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

Thu May 27 , 2021
இந்தியாவில் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை 2 லட்சத்திற்கும் குறைவாக இருந்த நிலையில் இன்றைய பாதிப்பு இரண்டாவது நாளாக 2 லட்சத்தை கடந்துள்ளது . இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக பல மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டு வருகிறது.இந்தியாவில் தற்போது கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்து வந்தாலும், ,உயிரிழப்பு சற்று குறைந்து கொண்டே வருகிறது. கொரோனா பாதித்தவர்களுக்கு தற்போது கருப்பு பூஞ்சை தொற்று ஏற்படுவது மேலும் அச்சத்தை ஏற்படுத்துகிறது. […]
covid-19-vaccination-in-tamilnadu
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய