இந்தியாவில் 12 முதல் 18 வயதினருக்கான முதல் தடுப்பூசிக்கு அனுமதி.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு தடுப்பூசிகள் தற்போது பயன்படுத்தப்பட்டு வருகின்றன.குறிப்பாக இந்தியாவில் கோவிஷீல்டு, கோவேக்சின், ரஷியாவின் ஸ்புட்னிக்-வி, அமெரிக்காவின் மாடர்னா, ஜான்சன் அண்ட் ஜான்சன் ஆகிய 5 தடுப்பூசிகள் அவசர பயன்பாட்டு ஒப்புதலைப் பெற்றுள்ளன

இதனைத் தொடர்ந்து இந்தியாவில் அவசர பயன்பாட்டு ஒப்புதலைப்பெறுகிற 6-வது தடுப்பூசி ஜைகோவ்-டி ஆகும்.இந்த தடுப்பூசியை நாடு முழுவதும் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் தன்னார்வலர்களுக்கு செலுத்தி பரிசோதித்து உள்ளனர்.

ஜைடஸ் கேடிலா நிறுவனம் தடுப்பூசியின் அவசர பயன்பாட்டு அனுமதிக்காக கடந்த மாதம் 1-ந் தேதி, இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகத்தில் விண்ணப்பித்தது.இந்த தடுப்பூசியை 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் உள்பட அனைத்து மனிதர்களுக்கும் செலுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜைகோவ்-டி தடுப்பூசியின் சிறப்பு அம்சங்கள்:

  • இதை ஊசி மூலம் செலுத்த வேண்டியதில்லை. இதை ‘இன்ஜெக்டர்’ மூலம் செலுத்தவேண்டும். இதனால் பெரிய அளவில் பக்க விளைவுகள் நேராது.
  • இது 3 ‘டோஸ்’ தடுப்பூசி ஆகும்.
  • இது கொரோனா வைரசுக்கு எதிரான உலகின் முதலாவது ‘டி.என்.ஏ.’ தடுப்பூசி ஆகும்.
  • இந்தியாவில் 12 முதல் 18 வயதினருக்கான முதல் தடுப்பூசி அவசர பயன்பாட்டுக்கு வருவது குறிப்பிடத்தக்கது.

Next Post

தடுப்பூசி போட்டும் டெல்டா வைரஸ் ஆதிக்கம்..

Sun Aug 22 , 2021
இந்தியாவில் ஏஒய் 1, ஏஒய் 2, ஏஒய்3 (டெல்டா பிளஸ்) ஆகிய வைரஸ்கள் மராட்டிய மாநிலத்தில் சேகரிக்கப்பட்ட மாதிரிகளில் ஜூலை மாதம் காணப்பட்டன. அதே நேரத்தில் இவை டெல்டா வைரசை விட அதிக வளர்ச்சி தன்மையைக் கொண்டிருக்கவில்லை. இந்தியாவில் இதுவரையில் 61 டெல்டா பிளஸ் பாதிப்புகளை கண்டறிய முடிந்துள்ளது. கொரோனா இனப்பெருக்க விகிதம் என்பது 0.89 சதவீதமாக உள்ளது. அதாவது கொரோனா பாதித்த ஒருவர், 0.89 சதவீதத்தினருக்கு மட்டுமே பரப்புகிற […]
delta-plus-corona-variant
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய