17 துணை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு : இன்று முதல் தொடங்குகிறது ..

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் துணை மருத்துவப்படிப்புகளான பி.எஸ்சி நர்சிங் ,பி.பார்ம் ,பிபிடி,பிஏஎஸ்எல்பி போன்ற துணை மருத்துவம் சார்ந்த 17 படிப்புகளுக்கு இன்று முதல் (செவ்வாய்க்கிழமை) கலந்தாய்வு தொடங்குகிறது .

நடப்பாண்டில் சுமார் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களுக்கு ,இணையவழியே சுமார் 38 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்ப பதிவு செய்துள்ளனர் .விண்ணப்பிக்கப்பட்ட அனைத்து விண்ணப்பங்களும் பரிசீலிக்கப்பட்டு ,மொத்தம் 37,344 பேர் கொண்ட தரவரிசைப் பட்டியல் ஆனது இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது .

இந்நிலையில் துணை மருத்துவப்படிப்புகளில் சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு ,சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி இயக்குனர் அலுவலகத்தில் காலை 9 .30 மணியளவில் நடைப்பெற்றது .இதனைத் தொடர்ந்து பொதுக் கலந்தாய்வு ஆனது பிப்ரவரி 10 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை இணையவழியில் நடைபெறும் .மேலும் இணையவழியில் நடைபெறுவதற்கான சில வழிமுறைகளை சுகாதாரத் துறை இணையதளங்களில் தெரிந்துக் கொள்ளலாம் .ஆன்லைன் கலந்தாய்விற்கு கட்டணமாக ரூ .250 செலுத்தி கலந்தாய்விற்கான இடத்தினை தேர்வு செய்து கொள்ளலாம் .

Next Post

'நீட்' தேர்வு ஆண்டுக்கு இருமுறை நடத்த திட்டம் : மத்திய அமைச்சகம் ஒப்புதல் ..

Tue Feb 9 , 2021
தேசிய நுழைவு மற்றும் தகுதித் தேர்வானது ஆண்டுக்கு இருமுறை நடத்தப்படுவதாக தகவல் ஒன்று வெளியாகி உள்ளது .மத்திய அமைச்சகம் நடப்பாண்டு முதல் நீட் தேர்வை வருடத்திற்கு இருமுறை நடத்தப்போவதாக ஒப்புதல் ஒன்றை அளித்துள்ளது . மாணவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டும் ,இணையவழி நீட் தேர்வில் மாணவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் சிக்கல்களை கருத்தில்கொண்டும் ,நீட் தேர்வு ஆனது ஆண்டுக்கு இருமுறை நடத்தப்பட உள்ளதாக முடிவு செய்யப்பட்டுள்ளது . மத்திய […]
NEET-exam-2021
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய