
நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகள், பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய பெயர்களில் மூன்று பிரிவாக வழங்கப்படுகிறது.
கலை, சமூகப்பணி, பொது விவகாரங்கள், அறிவியல் மற்றும் பொறியியல், வர்த்தகம் மற்றும் தொழில், மருத்துவம், இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, குடிமைப்பணி போன்ற பல்வேறு பிரிவுகள் மற்றும் துறைகளில் சிறப்பாக பணியாற்றுவோருக்கு பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன.
2021ஆம் ஆண்டு அறிவித்த பத்ம விருதுகளின்படி, ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே, மறைந்த திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட 7 பேருக்கு பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டது.
2021 ஆம் ஆண்டிற்க்கான பத்ம விருதுகளில் 7 பேருக்கு பத்ம விபூஷன், 10 பேருக்கு பத்ம பூஷன், 102 பேருக்கு பத்ம ஸ்ரீ விருதுகள் என இந்த ஆண்டு மொத்தம் 119 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டன.
பத்ம பூஷண் விருதுகள் மறைந்த முன்னாள் மத்திய அமைச்சா் ராம் விலாஸ் பாஸ்வான், குஜராத் முன்னாள் முதல்வா் கேஷுபாய் படேல், மறைந்த அஸ்ஸாம் முன்னாள் முதல்வா் தருண் கோகோய், கா்நாடகத்தைச் சோ்ந்த பிரபல கவிஞா் சந்திரசேகா் கம்பாரா, முன்னாள் மக்களவைத் தலைவா் சுமித்ரா மகாஜன் உள்பட 10 பேருக்கு பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது.
பத்ம ஸ்ரீ விருதுகள் பட்டிமன்ற பேச்சாளா் சாலமன் பாப்பையா, தேசிய கூடைப்பந்து வீரா் பி.அனிதா, வில்லிசைக் கலைஞா் சுப்பு ஆறுமுகம், கா்நாடகத்தைச் சோ்ந்த ஆா்.எல்.காஷ்யப், புதுச்சேரியைச் சோ்ந்த கே.கேசவசாமி உள்பட 102 பேருக்கு பத்ம ஸ்ரீ விருதுகள் வழங்கப்பட்டன. விருது பெற்றவர்களில் 29 போ் பெண்கள், 10 போ் வெளிநாட்டினா் ஆவா். இவா்களில் 16 பேருக்கு, அவா்களின் மறைவுக்குப் பிறகு இந்த உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது.