
இந்தியா முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதன் காரணமாக அனைத்து மாநிலங்களிலும் உள்ள மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன.
கொரோனா நோய்த் தொற்று தற்போது தமிழகத்திலும் தனது வீரியத்தை காட்ட தொடங்கியுள்ளது.இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகளிலும் கொரோனா நோயாளிகளுக்கு படுக்கைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.கொரோனா நோயாளிகளுக்கு படுக்கைகள் மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர் வசதிகள் எளிதில் கிடைக்க தமிழக அரசு ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்தை தொடங்கவுள்ளது.
தமிழக அரசு கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் உதவி கிடைக்க 104 என்ற உதவி எண்ணை அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.இதேபோல் @104GoTN என்ற பெயரில் ஒரு ட்விட்டர் கணக்கை தமிழக அரசு தொடங்கவுள்ளது.
தமிழக அரசு தொடங்கியுள்ள இந்த ட்விட்டர் பக்கத்தில் ஆக்சிஜன் மற்றும் படுக்கை வசதிகள் குறித்து மக்கள் யார் வேண்டுமென்றாலும் கோரிக்கை விடுக்கலாம் மேலும் #BedsForTN என்ற ஹேஷ்டாக்கை பயன்படுத்தி உதவியும் கோரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ட்விட்டர் பக்கத்தில் மருத்துவமனைகள், காலியாக உள்ள படுக்கை வசதி மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர் குறித்த விவரங்களையும் பதிவேற்றம் செய்யலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.எனவே இத்தகைய செயலியை மக்கள் அனைவரும் பயன்படுத்திக்கொள்ளுமாறு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.