வாய் வழியாக உட்கொள்ளும் கொரோனா தடுப்பூசி மருந்து – பைசர் நிறுவனம்

கொரோனவை கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பூசி மருந்துகள் இப்போது நடைமுறையில் வந்த வண்ணம் உள்ளன.பலரும் தடுப்பூசி மருந்துகளை செலுத்தி வருகின்றனர்.தற்போது இந்தியாவில் மட்டும் 14 .78 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

பைசர் நிறுவனம் தற்போது கொரோனாவுக்கு எதிராக எதிர்ப்பு சக்தியை அதிக அளவில் உருவாக்கும் வகையில் இரண்டு தடுப்பூசி மருந்துகளை உருவாக்கி வருகிறது .இதில் ஒன்று ஊசி மூலம் செலுத்தும் மருந்து, மற்றொன்று வாய் வழியாக உட்கொள்ளக்கூடிய மருந்தாகும்.

தற்போது பல்வேறு நிறுவனங்கள் வாய் வழியாக உட்கொள்ளும் கொரோனா தடுப்பூசி மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.இதனைத் தொடர்ந்து பைசர் நிறுவனம் வாய் வழியாக உட்கொள்ளும் மருந்தை உருவாக்கும் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்தி வருவதாகவும், அடுத்த ஆண்டு வாய் வழியாக உட்கொள்ளும் மருந்து தயாராகிவிடும் என்று பைசர் நிறுவன தலைமை அதிகாரி செய்தி குறிப்பு ஒன்றில் தெரிவித்துள்ளார்.

மேலும், வாய் வழியாக உட்கொள்ளும் மருந்து பல நன்மைகளை வழங்குவதாகவும்,இதனை வீட்டில் வைத்தே உட்கொள்ளலாம் எனவும் கூறியுள்ளார்.

Next Post

அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு ..

Wed Apr 28 , 2021
இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் தற்போது அதிதீவிரமடைந்து வருகிறது.இதன் காரணமாக நாடு முழுவதும் இரவு நேர ஊரடங்கு, வார இறுதி ஊரடங்கு, முழு முடக்கம் போன்ற விதிமுறைகள் அந்தந்த மாநிலங்களில் விதிக்கப்பட்டு வருகிறது. கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு ஆன்லைன் மூலம் பாடங்களும், தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா எதிரொலி காரணமாக வரும் மே மாதம் 10ஆம் தேதி நடக்கவிருந்த […]
anna-university-semester-exam-postponed-2021
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய