
ஒப்போ நிறுவனமானது தனது புதிய ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகப்படுத்தி வருகிறது .இந்த வகையில் ஒப்போ நிறுவனம் தனது ஏ-சீரிஸ்ன் வழியில் ஒப்போ A15 ஸ்மார்ட்போனை இந்தியாவில் விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது .
OPPO A15 ஸ்மார்ட்போனின் தயாரிப்பு மற்றும் சில அம்சங்களை அமேசான் நிறுவனமானது வெளிபடுத்தியுள்ளது .அமேசான் வெளியிட்ட பட்டியலின்படி ஒப்போ A15 கேமரா ஆனது AI அம்சங்களுடன் வெளிவருவதாக அறிவித்துள்ளது .ஒப்போ A15 ஸ்மார்ட்போன் ஆனது பல வண்ண கலர்களில் வெளிவரும் என எதிர்பாக்கப்படுகிறது .ஆனால் புதிய ஒப்போ A15 வகையானது நீல வண்ண கலரில் காட்டப்பட்டுள்ளது.
ஒப்போ A15 ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பில் 13 மெகாபிக்சல் பிரைமரி லென்ஸ் மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் ,மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ ஷூட்டர் பொருத்தப்பட்டுள்ளது .இதைத் தவிர மற்ற தகவல்கள் எதுவும் முறையாக வெளியிடவில்லை .இன்னும் ஒரு வார காலத்தில் OPPO A15 ஸ்மார்ட்போனின் அம்சங்கள் வெளிவரலாம் என எதிர்பாக்கப்படுகிறது .
OPPO A15 ஸ்மார்ட்போன் அமைப்பானது எஃப்.சி.சி.சி பட்டியலுடன் ஒற்றுப்போவதாக இருக்கிறது .இதில் எல்.ஈ.டி ஃபிளாஷ் மற்றும் கைரேகை ஸ்கேனர் உடனான சதுர வடிவிலான ட்ரிபிள் ரியர் கேமரா ஆகியவை எஃப்.சி.சி.சி உடன் ஒன்றிப்போகிறது .