தமிழகத்தில் செப். 1 முதல் பள்ளிகள் திறப்பு; சுழற்சி முறையில் மாணவர்களை வரவழைக்கத் திட்டம்..

தமிழகத்தில் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களை செப்டம்பர் 1 முதல் சுழற்சி முறையில் பள்ளிக்கு வரவழைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார் .

பள்ளிகள் குறித்து தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசியபோது, நாடு முழுவதும் கொரோனா தொற்று குறைந்துள்ளதை அடுத்து, பல்வேறு மாநிலங்களில் பல்வேறு கட்டங்களாக பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தமிழகத்தில் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளைத் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. செப்டம்பர் 1 முதல் பள்ளிகளைத் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இதுகுறித்த அறிவிப்பை தமிழக முதல்வர் விரைவில் வெளியிடுவார் என்று தெரிவித்துள்ளார்.

இதன்படி பள்ளிகளுக்கு சுழற்சி முறையில் மாணவர்களை வரவழைக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஒரு வகுப்பிற்கு 20 மாணவர்கள் என்ற அடிப்படையில் திட்டமிடப்பட்டு பள்ளிகளைத் திறப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன என்றார்.

Next Post

தமிழகத்தின் சிறந்த மாநகராட்சியாக தஞ்சாவூர் தேர்வு

Wed Aug 11 , 2021
ஆண்டுதோறும் தமிழகத்தில் சிறந்த மாநகராட்சி, நகராட்சிக்கான முதல்வரின் சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. சுற்றுசூழல், வாழ்க்கை முறை, பொருளாதார சூழல், நிர்வாகம் உள்ளிட்ட பல காரணிகளை கொண்டு இந்த விருதுக்கு மாநகராட்சி, நகராட்சிகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. இந்த வகையில், நடப்பாண்டின் சிறந்த மாநகராட்சிக்கான முதல்வர் விருதுக்கு தஞ்சாவூர் மாநகராட்சி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாநகராட்சிக்கான ரூ.25 லட்சம் மற்றும் விருதை ஆகஸ்ட் 15 சுதந்திர தின விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார். மேலும், […]
Thanjavur-temples
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய