பிளஸ் 2 மாணவர்களுக்கு ஆன்லைனில் திருப்புதல் பயிற்சி – பள்ளி கல்வித் துறை அறிவிப்பு ..

தமிழகத்தில் கொரோனா பரவல் தொற்று அதிகரித்து வருவதன் காரணமாக அனைத்து பள்ளிகளும் மற்றும் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டும் ,ஒத்திவைக்கப்பட்டும் உள்ளன .இதில் குறிப்பாக பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கடந்த 23-ந்தேதி யுடன் பிளஸ்-2 மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு நடந்து முடிந்த நிலையில், தற்போது மாணவர்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. மாணவர்கள் இனி பள்ளிக்கு வர வேண்டாம். பொதுதேர்வுக்கு வந்தால் போதும் என பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது .

இந்நிலையில் தனியார் பள்ளிகள் பிளஸ்-2 மாணவர்களுக்கு தொடர் பயிற்சிகளையும், தேர்வுகளையும் நடத்தி வருகின்றன.ஆனால் அரசு பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களுக்கு விடுமுறை விடப்பட்டதை போல தங்களுக்கும் விடுமுறை விட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த கோரிக்கையை ஏற்று ஆலோசனை நடத்திய பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள்,அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இந்த ஆண்டு வேலை நாட்கள் குறைவாகவே உள்ளதாகவும், மேலும் தமிழகத்தில் சட்ட சபை தேர்தல் நடைபெற்றதால் மாணவர்களுக்கு பாடம் எடுக்கும் பணிகள் பாதிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது .

இந்நிலையில் அரசின் அறிவிப்பு வரும் வரை அரசு பள்ளி ஆசிரியர்கள் தினமும் உரிய நேரத்தில் பள்ளிக்கு வர வேண்டும் எனவும் ,ஆசிரியர்கள் வீட்டில் இருக்கும் சூழ்நிலை ஏற்பட்டால் பிளஸ்-2 மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் திருப்புதல் பயிற்சி பாடங்களை நடத்த வேண்டும். பிளஸ்-2 வகுப்புகளுக்கு ஏற்கனவே பாடம் நடத்தப்பட்டு இருப்பதால் பொதுத்தேர்வு வரை பாடங்களை மீண்டும் எடுத்து மாணவர்கள் நல்ல மதிப்பெண் எடுக்க ஆசிரியர்கள் உதவ வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை அனைத்து பள்ளிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Next Post

இந்தியாவில் ஒரு நாளில் புதிய உச்சமாக 3,52,991 பேருக்கு கொரோனா பாதிப்பு..

Mon Apr 26 , 2021
இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு இன்று மேலும் புதிய உச்சத்தை அடைந்துள்ளது.ஒரே நாளில் புதிதாக 3,52,991 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் தொடர்ந்து ஒருநாள் கொரோனா பாதிப்பு 3.5 லட்சத்தை கடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது,நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 3,52,991 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 14.53 கோடியைத் தாண்டியுள்ளது. இன்று காலை நிலவரப்படி, இந்தியா […]
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய