பொறியியல் மாணவர்களுக்கு ஏப்ரல்15 முதல் ஆன்லைன் தேர்வு ..

தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக பள்ளி,கல்லூரிகள் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டன. கொரோனா பொதுமுடக்கம் காரணமாக வகுப்புகள் ஆன்லைனில் நடத்தப்பட்டது,மேலும் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இறுதி ஆண்டு படித்த மாணவர்களுக்கு மட்டும் இறுதி செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டது.

நடப்பாண்டு தொடக்கத்தில் கொரோனாவின் தாக்கம் படிப்படியாக குறைந்து வந்தது.இதனால் வழக்கம் போல் கல்லூரிகள் திறக்கப்பட்டன. பின்னர்,மீண்டும் கொரோனாவின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியதால் இறுதி ஆண்டு மாணவர்கள் தவிர அனைவருக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது.

தற்போது,என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் தேர்வு நடத்த அண்ணா பல்கலைக் கழகம் அனுமதி அளித்துள்ளது. இதன்படி, பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வுகள் ஏப்ரல் 15-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொறியியல் மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வை மார்ச் 31 ஆம் தேதிக்குள் முடிக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது.செய்முறைத் தேர்வை குறிப்பிட்ட காலிதிற்குள் முடிக்க தவறிய கல்லூரிகள்,பல்கலைக் கழகத்திடம் முன் அனுமதி பெற்று பின்னர் நடத்திக் கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

Next Post

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் : ஒரே நாளில் 53,480 பேருக்கு கொரோனா தொற்று..

Wed Mar 31 , 2021
இந்தியா முழுவதும் கொரோனாவின் தாக்கமானது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.தற்போது,நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 53,480 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பில் இருந்து 41,280 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இன்று காலை நிலவரப்படி, இந்தியா முழுவதும் புதிதாக 53,480 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன்மூலம் நாடு முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,21,49,335 ஆக அதிகரித்துள்ளது .கொரோனா […]
covid19-test
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய