
பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது.இந்நிலையில் தற்போது சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது.
இதனைத் தொடர்ந்து வருகிற 27-ந்தேதி முதல் அக்டோபர் மாதம் 17-ந்தேதி வரை பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு தொடங்கி நடைபெற உள்ளது.
மாணவர்களின் தரவரிசை பட்டியல் அடிப்படையில் எந்தெந்த மாணவர்கள்? எந்தெந்த தேதியில்? ஆன்லைன் கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும் என்பது குறித்த அட்டவணையும், விருப்ப கல்லூரிகளை தேர்வு செய்வதற்கு ஏதுவாக கடந்த கல்வியாண்டில் என்ஜினீயரிங் கல்லூரிகளின் திறன் அறிக்கையும் தமிழ்நாடு என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை இணையதளத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது.
பொறியியல் மாணவர் சேர்க்கையானது ஆன்லைன் மூலம் நடைபெற இருப்பதால்,முதலில் கலந்தாய்வுக்கான கட்டணம் செலுத்தி, அதன் பின்னர், விருப்ப கல்லூரிகளை தேர்வு செய்வதற்கும், தற்காலிக இடஒதுக்கீட்டு ஆணை வெளியிடுவதற்கும், அதனை உறுதி செய்வதற்கும் அவகாசம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.