
ஒன்பிளஸ் நிறுவனம் தனது புதிய தயாரிப்பான one plus 9 ஸ்மார்ட்போனை அடுத்த வருடம் வெளியிடுவதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளது .இந்நிறுவனம் சில தினங்களுக்கு முன்பு ஒன்பிளஸ் 8T ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது.
பொதுவாக ஒன்பிளஸ் நிறுவனம் தனது புதிய வகை ஸ்மார்ட்போன்களை ஆண்டுதோறும் ஏப்ரல் மாதத்தில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருந்தது .ஆனால் இந்தமுறை சற்று முன்கூட்டியே ,அதாவது மார்ச் 2021 அன்று வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது .
ஒன்பிளஸ் நிறுவனமானது ,one plus 9 ஸ்மார்ட்பஹோன் பற்றிய தகவல்களை இன்னும் வெளியிடவில்லை ,அடுத்த வருடம் வெளியாகப்போகும் one plus 9 ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் மற்றும் அம்சங்கள் இன்னும் சரியாக வெளியிடவில்லை .one plus 9 ஸ்மார்ட்போன் பற்றிய தகவலானது ஆண்ட்ராய்டு மத்திய தளத்தில் வெளிவந்துள்ளது .அந்த தகவல் என்னவென்றால் – இது ‘லெமனேட்’ என்கிற குறியீட்டு பெயரை கொண்டிருக்கும்.
one plus 9 ஸ்மார்ட்போன் ,கடந்த ஆண்டு வெளியான ஒன்பிளஸ் 8 ஸ்மார்ட்போன் அம்சங்களை விட கூடுதலான அம்சங்களையும் ,மேம்பாட்டையும் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது .