“ஒமிக்ரான்” புதிய வகை கொரோனா வைரஸ்..

ஒமிக்ரான் என்ற புதிய வகை கரோனா வைரஸ் உலகம் முழுவதும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது .புதிய வகை கொரோனாவில் தென்படும் அதிக அளவிலான மாறுதல்தள் தடுப்பூசிக்கு எதிராக செயல்படும் தன்மையையும் பரவல் தன்மையும் அதிகரிக்க செய்கிறது. இது தீவிரமான அறிகுறிகளுக்கு இட்டு செல்லும் என்றும் கூறப்படுகிறது.

இந்த புதிய வகை கொரோனா முதன்முதலில் தென்னாப்பிரிக்காவில்தான் கண்டறியப்பட்டுள்ளது. அதன் பின்னர், போட்ஸ்வானா உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கு அது பரவியுள்ளது. அங்கு, இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களும் இந்த புதிய வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய வகை கொரோனாவில் மொத்தமாக 50 மாற்றங்கள் தென்பட்டுள்ளது.இதில், 30க்கும் மேற்பட்ட மாற்றங்கள் புரத கூர்முனைகளில் கண்டறியப்பட்டுள்ளது. தற்போது செலுத்தப்பட்டுவரும் கொரோனா தடுப்பூசியின் இலக்கு இந்த புரத கூர்முனைகளே ஆகும் . உடலில் உள்ள அணுக்களை கடந்து உள் புகுவதற்கு இந்த புரத கூர்முனைகளையே வைரஸ் பயன்படுத்துகிறது. இந்த கொரோனா தொற்று கவலைக்குரிய வகையைச் சோ்ந்தது என உலக சுகாதார நிறுவனம் வகைப்படுத்தியுள்ளது.

Next Post

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் புதிய வகை கொரோனா..

Sat Nov 27 , 2021
உலகையே அச்சுறுத்தி வரும் பி.1.1.529 என்று பெயரிடப்பட்டுள்ள புதிய வகை கொரோனா வைரஸ், இதுவரை இல்லாத வைரஸ்களில் இது மிக மோசமானது என்கின்றனர் மருத்துவ வல்லுநர்கள்.மேலும் இந்த வைரஸ் நோய் எதிர்ப்புச்சக்தியை தவிர்க்கும் தன்மையை கொண்டிருப்பதுதான் மிகவும் கவலை தருவதாக ஆய்வியல் அறிஞர்கள் கூறுகின்றனர். தற்போது உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக தடுப்பூசிகள் போட்டு வருகின்றன.இந்நிலையில் தற்போது அச்சுறுத்தி வரும் புதிய வகை கொரோனா வைரசுக்கு எதிராக […]
new-type-of-corona-omaigron
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய