
உருமாற்றம் அடைந்த புதிய வகை கொரோனா வைரஸ் ‘ஓமைக்ரான்’ மற்ற கொரோனா வகைகளை விட மிகவும் வீரியம் மிக்கதாக உள்ளது. இதனால் இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தற்போது தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
புதிய கட்டுப்பாடுகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் :
- வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் வரும் பயணிகளை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட வேண்டும்.
- மேலும் ஏதேனும் அறிகுறி இருந்தால் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும். அத்துடன் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் உரிய வழிகாட்டுதலின்படி அவர்களுக்கு சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஒமைக்ரான் வைரஸால் பரவிய நாடுகளான தென்னாப்பிரிக்கா, சீனா, நியூஸிலாந்து, ஹாங்காங், பிரிட்டன், பிரேஸில், வங்கதேசம், போட்ஸ்வானா, மோரீஷஸ், ஜிம்பாப்வே, சிங்கப்பூர், இஸ்ரேல் உள்ளிட்ட 12 நாடுகளில் இருந்து வருவோருக்கு விமான நிலைய வளாகத்திலேயே ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை கட்டாயம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.