
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32-வது ஒலிம்பிக் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. ஒலிம்பிக் தொடரில் இன்று நடைபெற்ற மல்யுத்த போட்டியில் இந்திய வீரர் ரவிக்குமார் தாஹியா இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
அரையிறுதியில் கசகஸ்தான் வீரர் நூரிஸ்லாம் சன்யேவை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு ரவிக்குமார் தாஹியா முன்னேறியுள்ளார். இறுதிப்போட்டிக்கு முன்னேறியதன் மூலம் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் கிடைப்பது உறுதியாகியுள்ளது.
இன்று நடைபெற்ற மல்யுத்தம் 57 கிலோ எடைப்பிரிவு அரையிறுதி போட்டியில் கஜகஸ்தான் வீரரை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளார் இந்திய வீரர் ரவிக்குமார் தாஹியா.அரையிறுதியில் வென்றதன் மூலம் இந்திய வீரர் ரவிக்குமாருக்கு பதக்கம் உறுதியாகியுள்ளது.
ஏற்கனவே பேட்மிண்டனில் பி.வி.சிந்து வெண்கலமும், பளு தூக்குதலில் மீராபாய் சானு வெள்ளியும், மகளிருக்கான குத்துச்சண்டையில் லாவ்லினா வெண்கல பதக்கமும் வென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.