
ஒலிம்பிக் போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் உலகின் மிகப்பெரியப் போட்டியாகும்.ஒலிம்பிக் போட்டியானது கடந்த முறை 2016 ஆம் ஆண்டு ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்றது .
கொரோன பரவல் காரணமாக 2020 ஆம் ஆண்டு டோக்கியோவில் ,ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 9 தேதி வரை நடைபெறவிருந்த ஒலிம்பிக் போட்டியானது ஒத்திவைக்கப்பட்டது .கடந்த ஓராண்டு காலமாக ஒத்திவைக்கப்பட்ட ஒலிம்பிக் போட்டியானது, தற்போது நடப்பாண்டில்(2021) நடைபெறும் என ஒலிம்பிக் குழுவின் தலைவர் தாமஸ் பாக் கூறியுள்ளார் .ஒலிம்பிக் போட்டியானது ஜூலை 23 முதல் தொடங்க இருப்பதாகவும் ,இந்த விளையாட்டு போட்டியை வெற்றிகரமாகவும் பாதுகாப்பாகவும் நடத்த உள்ளோம் எனவும் தாமஸ் பாக் கூறினார் .
தற்போது ஒலிம்பிக் போட்டியானது வரும் ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 8 ஆம் தேதி வரையிலும் ,பாரஒலிம்பிக் போட்டிகள் ஆகஸ்ட் 24 முதல் செப்டம்பர் 5 வரை நடைபெறும் என ஐஓசி அமைப்புக்குழு மற்றும் இதர அமைப்புகள் அறிவித்துள்ளன .