தமிழக சட்டப் பல்கலையில் பிஎச்.டி. மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு அறிவிப்பு

2021- 22 ஆம் கல்வி ஆண்டின் பிஎச்.டி (ph.d)ஆராய்ச்சி படிப்புக்காண மாணவர் சேர்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலையில் காலியாக உள்ள மொத்தம் 110 இடங்களுக்கான மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்ப படிவம் மற்றும் தகவல் கையேட்டை சட்ட பல்கலையின் அதிகாரப்பூர்வ இணையதளமான http://tndalu.ac.in/ என்ற இணையதளத்தில் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விண்ணப்பக்கட்டணமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 750 ரூபாயும், மற்றவர்கள் 1,250 ரூபாயும் செயல்முறை கட்டணம் செலுத்த வேண்டும்.மேலும், அடிப்படை கல்வி தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு, ஜூன் 19ல் ஆன்லைன் வழி நுழைவு தேர்வு நடத்தப்படும்.இதில் பெறும் மதிப்பெண் அடிப்படையில், மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்று பல்கலைக்கழக பொறுப்பு பதிவாளர் பாலாஜி தெரிவித்துள்ளார்.

Next Post

ஆக்சிஜன் சிலிண்டர் உதவி யாருக்கு தேவை? மருத்துவரின் ஆலோசனைகள் மற்றும் விளக்கம்

Wed May 12 , 2021
இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் அனைத்து மாநிலங்களிலும் கடுமையான சூழலை ஏற்படுத்தியுள்ளது. தற்போது கொரோனாவின் முக்கியமான அறிகுறியாக மூச்சுத்திணறல் கருதப்படுகிறது. ஒரு சிலர் லேசான கொரோனா பாதிப்பு ஏற்பட்டவுடன், தங்களுக்கும் ஆக்சிஜன் தேவைப்படுமோ எனக் கருதி, ஆக்சிஜன் சிலிண்டர்களை வீட்டில் வைத்துக்கொள்வதை தவிர்க்கவேண்டும் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் ஆக்சிஜன் சிலிண்டர் தேவைப்படாது என்பதை மக்கள் தெளிவாக புரிந்து கொள்ளவேண்டும்.ஆக்சிமீட்டர் கருவியில் 92 அல்லது 90 […]
oxyjan-cyclinder-for-covid-patients
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய