
புகழ்பெற்ற தொழில்நுட்ப நிறுவனமான நோக்கியா(NOKIA) தனது புதிய வகை மடிக்கணினி மாதிரிகளை கூடிய விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது.இந்த மடிக்கணினி மாதிரிகளுக்கு “பியூர் புக் ” என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது .
விரைவில் வெளியாக இருக்கும் “பியூர் புக் ” மடிக்கணினி மாதிரிகளை பற்றி நோக்கியா நிறுவனமானது எந்தவொரு தகவலையும் வெளியிடவில்லை மற்றும் வெளியீட்டு தேதி ,அதன் விலை ஆகிவற்றை அதிகபூர்வமாக நோக்கியா நிறுவனம் இதுவரை வெளியிடவில்லை.
சமீபத்தில் நோக்கியா நிறுவனமானது ஸ்மார்ட் டிவி தயாரிப்பில் காலடி எடுத்த வைத்த நிலையில் ,தற்போது மடிக்கணினி தயாரிப்பிலும் களம் இறங்கியுள்ளது .
நோக்கியா நிறுவனமானது கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு ,9 மடிக்கணினி மாதிரிகளை இந்திய தர நிர்ணய பணியகத்தின் தர சான்றிதழ்களை பெற்றுள்ளது.அவை NKi510UL82S, NKi510UL85S, NKi510UL810S, NKi510UL165S, NKi510UL1610S, NKi310UL42S, NKi310UL82S, NKi310UL85S, என்ற எண்களுடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது .