நோபல் பரிசு 2021 : மருத்துவத்திற்க்கான நோபல் பரிசு அறிவிப்பு..

ஆண்டுதோறும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தற்போது 2021 ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசுகள் இன்று (அக்டோபர் 5, திங்கள்கிழமை) முதல் அறிவிக்கப்படுகின்றன. முதல் நாளான இன்று மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த பரிசு இருவருக்கு பகிர்ந்தளிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வெப்பநிலை மற்றும் தொடுதலுக்கான ஏற்பிகளைக் கண்டறிந்ததற்காக டேவிட் ஜூலியஸ், ஆர்டெம் பட்டபோர்ஷியன் ஆகிய இருவருக்கும் 2021 ஆம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வெப்பம், குளிர் மற்றும் தொடுதல் ஆகியவை நரம்பு மண்டலத்தில் ஏற்படுத்தும் தாக்கம் அது அனுப்பும் சமிக்ஞைகள் குறித்த விஞ்ஞானிகளின் இந்த ஆய்வு, நாள்பட்ட வலி தொடர்பான சிகிச்சைக்கும் பல்வேறு நோய்நிலைக்கான சிகிச்சைக்கும் பயன்படும்.

மேலும் அமைதிக்கான நோபல் பரிசு நார்வேயிலும், பிற துறைகளுக்கான நோபல் பரிசு ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமிலும் அறிவிக்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

Next Post

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு : புதிதாக 20,799 பேருக்கு தொற்று..

Mon Oct 4 , 2021
நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 20,799 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,38,34,702 ஆக உயர்ந்துள்ளது. நேற்று அதிகபட்சமாக கேரளாவில் 12,297, மகாராஷ்டிராவில் 2,692, தமிழ்நாட்டில் 1,531 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.கொரோனா தொற்று பாதிப்புக்கு ஒரே நாளில் 180 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் நாடு முழுவதும் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,48,997 ஆக உள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட […]
corona-updated-in-india
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய