
ஆண்டுதோறும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், இலக்கியம், அமைதி ஆகிய துறைகளில் மகத்தான சாதனை புரிபவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து நடப்பு ஆண்டிற்க்கான நோபல் பரிசுகள் குறித்த அறிவிப்பு கடந்த திங்கட்கிழமையில் இருந்து அறிவிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே மருத்துவம், இயற்பியல் மற்றும் வேதியியல் துறைக்கான நோபல் பரிசு பெறுபவர்கள் குறித்து அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், இலக்கியத்துக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டது. நாவலாசிரியர் அப்துல்ரசாக் குர்னாவுக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கப்படும் என நோபல் கமிட்டி அறிவித்துள்ளது. அகதிகள் பிரச்சினை, காலனி ஆதிக்கம் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பான எழுத்துக்காக அவருக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.