நோபல் பரிசு ஆனது ஆண்டுதோறும் மருத்துவம் ,இலக்கியம் ,இயற்பியல்,வேதியியல் ,பொருளாதாரம் மற்றும் அமைதி ஆகிய துறைகளில் சிறந்து விளங்குவோருக்கும் மற்றும் புதிய முயற்சிகளில்(மேற்கண்ட துறைகளில்) தன்னை முழுமையாக அர்ப்பணித்து கொண்டு அதில் வெற்றிபெருபவருக்கும் வழங்கப்பட்டு வருகிறது .இந்த ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்றவர்கள் .

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு -2020 :
பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு ஆனது பொருளாதார நிபுணர்கள் பால் ஆர்.மில்க்ரோம், ராபர்ட் பி.வில்சன் ஆகிய இருவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது .இவர்கள் இருவரும் ஏல முறைகள் பற்றிய ஆராய்ச்சியை மேற்கொண்டு அதில் ஏலக் கோட்பாட்டின் மேம்பாடு, ஏலத்திற்கான புதிய வடிவமைப்பு ஆகியவற்றை கண்டுபிடித்ததற்க்காக நோபல் பரிசு ஆனது வழங்கப்பட்டது .
இந்த ஏல கோட்பாடு மற்றும் வடிவமைப்பு ஆனது உலகெங்கிலும் உள்ள விற்பனையாளர்கள், வணிகர்கள், வரி செலுத்துவோருக்கு பயன்படும் எனவும் தேர்வுக்குழு அறிவித்தது.