
இந்தியாவில் உள்ள ரோச் இந்தியா நிறுவனம் தயாரித்துள்ள ரோச்சின் ஆன்டிபாடி காக்டெயில் மருந்தை அவசர பயன்பாட்டுக்காக பயன்படுத்திக்கொள்ள இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளது.
கொரோனாவுக்கு எதிரான எதிர்ப்பு மருந்தை,இந்தியாவில் உள்ள பிரபல மருந்து நிறுவனமான ரோச் இந்தியா, கொரோனவுக்கான மருந்து ஒன்றை தயாரித்துள்ளது.இந்த எதிர்ப்பு மருந்து ரோச்சின் ஆன்டிபாடி காக்டெயில் என்ற பெயரால் அழைக்கப்படுகிறது.இந்த மருந்தை சமீபத்தில் இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு நிறுவனம்,அவசர பயன்பாட்டுக்கு பயன்படுத்திக்கொள்ள ஒப்புதல் அளித்தது.
ரோச்சின் ஆன்டிபாடி காக்டெயில் :
கொரோன எதிர்ப்பு மருந்தான ரோச்சின் ஆன்டிபாடி காக்டெயில் மருந்து லேசான மற்றும் மிதமான பாதிப்பு கொண்ட நோயாளிகளுக்கு சிறந்த பலனை அளிக்கும் என்று சிப்லா நிறுவனம் கூறியுள்ளது.இந்த மருந்தை சிப்லா மருந்து நிறுவனம் நாடு முழுவதும் வினியோகம் செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த மருந்தின் மூலம் உயிரிழப்பு 70 சதவீதம் வரை குறைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
ரோச்சின் ஆன்டிபாடி காக்டெயில் மருந்தின் 2 டோஸ்கள் கொண்ட ஒரு பாக்கெட்டை 2 நோயாளிகளுக்கு பயன்படுத்தலாம். அதில் ஒரு டோசின் விலை ரூ.59,750 ஆகும். இரு டோசும் இணைந்த பாக்கெட்டின் விலை ரூ.1 லட்சத்து 19 ஆயிரத்து 500 என அறிவிக்கப்பட்டுள்ளது.