நியூசிலாந்து பிரதமர் – ஜெசிந்தா ஆர்டெர்ன் ! 2 -வது முறையாக பிரதமரான ஜெசிந்தா !

நியூசிலாந்து நாட்டின் பிரதமராக இரண்டாவது முறையாக ஜெசிந்தா ஆர்டெர்ன் பதவியேற்கிறார் .நியூசிலாந்து நாட்டின் பொதுத்தேர்தலில் தொழிலாளர் கட்சியின் தலைமையில் ஜெசிந்தா ஆர்டெர்ன் அபார வெற்றி பெற்று 2 வது முறையாக பிரதமரானார் .

கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருந்த காலகட்டத்தில், உலக நாடுகள் அனைத்தும் அஞ்சி நடுங்கிய நேரத்தில், நியூசிலாந்தின் ஜெசிந்தா தனது முற்போக்கு சிந்தனையோடு செயல்பட்டு சரியான நேரத்தில் திட்டமிட்டு கொரோனோவின் தொற்றை படிப்படியாக குறைத்தார் .ஜெசிந்தா அவர்கள் தன்னம்பிக்கையுடனும் ,மிக நேர்த்தியுடனும் செயல்பட்டு அதிகமான உயிர்பலியை தடுத்து நிறுத்தினார் .

ஜெசிந்தாவின் அரசியல் பிரவேசம் :

ஜெசிந்தாவின் அரசியல் களமானது அவர் முதல் ஆட்சியை அமைத்தபோது பல சவால்களை சந்தித்து வந்தார்.அவர் பொருளாதார சீர்திருத்தங்கள் குறித்து மக்களிடையே உறுதியளித்திருந்தார் .ஆனால் அதை அவர் முழுமையாக நிறைவேற்றவில்லை .அவர் முதல் தேர்தலை தேசியவாத கட்சியுடன் இணைந்து போட்டியிட்டு வென்றார் .

ஜெசிந்தா 2 வது முறையாக பிரதமராவதற்கு முக்கிய காரணமாக இருந்தது, அவர் கொரோன தடுப்பு நடவடிக்கைகளில் அவர் காட்டிய தீவிர வேகமும் ,ஈடுபாடுக்கும் கிடைத்த வெற்றியாக கருதினார் .இவர் அரசியல் வாழ்வில் புதிய சாதனை ஒன்றையும் நிகழ்த்தியுள்ளார்,அது அவரது தொழிலாளர் கட்சியானது தனித்து ஆட்சி அமையும் அளவுக்கு வாக்கு சதவிகிதத்தை பெற்று வென்றுள்ளார் .

மக்கள் பக்கம் – ஜெசிந்தா:

ஜெசிந்தா ஆட்சிக்கு வந்தது முதலே மக்கள் மனதில் இடம் பிடித்து விட்டார். அவர் செய்த ஒவ்வொரு செயலும் மக்களால் பாராட்டப்பட்டது.ஜெசிந்தா மக்கள் மத்தியில் உரையாற்றியபோது , கடந்த 50 ஆண்டுகளில் எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் கொடுக்காத ஆதரவை நீங்கள் தொழிலாளர் கட்சிக்கு கொடுத்ததற்கு மிகவும் அன்புடன் தனது நன்றியை தெரிவித்து கொண்டார். இது மிகப் பெரும் கெளரவமாகும். நீங்கள் கொடுத்த இந்த அதிகாரத்தை நாங்கள் தவறாக பயன்படுத்த மாட்டோம் என்றும் தனது உரையில் தெரிவித்தார் .

நடைபெற்ற தேர்தலில் ஜெசிந்தாவின் தொழிலாளர் கட்சிக்கு 49 சதவிகித வாக்குகள் கிடைத்தன .தேசியவாத கட்சிக்கு 27 சதவிகித வாக்குகள் பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றது .கொரோனாவின் தடுப்பு நடவடிக்கைகளில் உலக நாடுகளே வியக்கும் வகையில் ஜெசிந்தாவின் பங்கு பெரும் வகையில் போற்றத்தக்கதாக இருந்தது .

Next Post

இன்றைய ராசி பலன்கள் : 19 -10 -2020

Mon Oct 19 , 2020
மேஷம் இன்று நீங்கள் தன்னம்பிக்கையோடு செயல்படும் நாளாகும்.காரியங்கள் கைக்கூடும்.உங்கள் துணைவியினால் மகிழ்ச்சி உண்டாகும் .இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் முடிக்கவேண்டிய காரியங்கள் சற்று தாமதமாகவே முடியும் .வீண் விவாதங்களை தவிர்த்தல் நல்லது ஆகும் .புதிய முயற்சிகளை தவிர்த்தல் நல்லது .வியாபாரத்தில் சில பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடும் . ரிஷபம் ரிஷப ராசி நண்பர்களே இன்று உங்களுக்கு சாதகமான நாளாகும் .இன்று உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும் .சகோதரர்களின் […]
indraya-raasi-palangal-19-10-2020
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய