
முதலமைச்சரிடம் பொதுமக்கள் புகார் அளிக்க தனிப்பிரிவு இணையதளம் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது.cmcell.tn.gov.in என்ற இணையதளம் மூலம் பொதுமக்கள் தங்களது புகார்களை அளிக்கலாம். இந்த தனிப்பிரிவு இணையத்தளத்தில் புகார்கள் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றி தெரிந்துகொள்ள வழி வகை செய்யப்பட்டுள்ளது.
தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளிலும் இந்த இணையதளம் செயல்படுகிறது. பொதுமக்கள் இந்த இணையதளம் மூலம் தங்களது புகார்களை அளிக்கலாம்.
முதல்வரின், உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற நிகழ்வின் மூலம் பெறப்பட்ட மனுக்களுக்கு 100 நாட்களுக்குள் தீர்வு காணும் பொருட்டு, ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ என்ற புதிய துறை உருவாக்கப்பட்டது. இத்துறையில் பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.