
உலகையே அச்சுறுத்தி வந்த கொரோனா தொற்றுக்கு பல நாடுகளும் தடுப்பு மருந்துகளை கண்டுபிடித்தும் ,தயாரித்தும் வருகிறது.குறிப்பாக அமெரிக்காவில் பைசர், மாடர்னா, ஜான்சன் அண்டு ஜான்சன் ஆகிய மூன்று தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டும் மேலும் அவசர கால பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்பட்டும் வருகிறது.
இந்நிலையில் அமெரிக்காவில் நோவாவேக்ஸ் என்ற நிறுவனம் கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளதாக அறிவித்துள்ளது.இதுவரை சுமார் 29,960 (அமெரிக்கா மற்றும் மெக்சிகோ) பேரிடம் பரிசோதனை செய்யப்பட்டதில் மிதமான, கடுமையான நோயில் இருந்து 100 சதவீதம் பாதுகாக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட நோவாவேக்ஸ் தடுப்பு மருந்தானது 90.4 சதவீத செயல்திறன் கொண்டது என்றும், உருமாற்றம் அடைந்த கொரோனாவிற்கு எதிராக சிறப்பாக செயல்படுகிறது என்றும் தெரிவித்துள்ளது. இந்த தடுப்பூசியை இருப்பு வைப்பதும் எடுத்து செல்வதும் சுலபம் எனவும் நோவாவேக்ஸ் தெரிவித்துள்ளது.
நோவாவேக்ஸ் தடுப்பூசியை இந்தியாவில் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா தயாரிக்கும் உரிமையை பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.