ஜப்பானில் புதிய வகை கொரோனா – 93 பேர் பாதிப்பு ..

புதிய வகை கொரோனா தொற்றால் ஜப்பானில் 93 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது .இந்த புதிய வகை கொரோனா வைரஸ் ஆனது கிழக்கு ஜப்பானின் கான்டோ பகுதியில் 91 பேருக்கும் மற்றும் விமான நிலையத்தில் பரிசோதனையின் போது 2 பேருக்கு தொற்று இருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸை முழுமையாக கட்டுப்படுத்தும் நோக்கில் ஜப்பான் அரசு ஈடுபட்டுள்ளது.எனவே ஜப்பானில் மார்ச்-7 ஆம் தேதி வரை அவசர நிலை பிரகடனம் அறிவிக்கப்பட்டுள்ளது .

ஜப்பான் சுகாதாரத் துறை வெளியிட்ட அறிக்கையில் ,புதிய கொரோனா வைரஸ் ஆனது அதிக பரவும் தன்மை கொண்டதாகவும் ,இதன் காரணமாக தொற்றின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.ஜப்பானில் முதற்கட்டமாக கொரோனா தடுப்பூசியானது 40,000 சுகாதார பணியாளர்களுக்கு செலுத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இந்த புதிய வகை கொரோனா வைரஸ் ஆனது பிரிட்டன் மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளில் உருமாறி வந்தது அண்மையில் கண்டறியப்பட்டது.இதன் காரணமாக தற்போது அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைககளை தீவிரப்படுத்தியுள்ளது.

உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரசால் உலக அளவில் இதுவரை 11 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 20 லட்சத்துக்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது .

Next Post

வேளாண்மை அதிகாரிக்கான காலிப்பணியிடங்கள் : டிஎன்பிஎஸ்சி(TNPSC) அறிவிப்பு ..

Fri Feb 19 , 2021
டிஎன்பிஎஸ்சி தேர்வாணையமானது, தமிழ்நாடு வேளாண்மை சேவை நீட்டிப்பு துறையில் காலியாக உள்ள வேளாண்மை அதிகாரி (நீட்டிப்பு) பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.இதற்கு தகுதியானவர்களிடமிருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தமிழ்நாடு வேளாண்மை நீட்டிப்பு சேவை பணி : வேளாண்மை அதிகாரி(நீட்டிப்பு) காலியிடங்கள் : 365 மாத சம்பளம்: ரூ.37,700 – 1,19,500 தகுதி : இளங்கலை பட்டம் (வேளாண்மை பாடப்பிரிவில்).பத்தாம் வகுப்பு வரை தமிழை ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் […]
tnpsc-latest-notification-2021
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய