வேகமாக பரவும் புதிய வகை கொரோனா: இந்தியாவில் எந்தவித பாதிப்பும் இல்லை – மத்திய சுகாதாரத்துறை..

புதிய வகை உருமாற்ற கொரோனா வைரஸ் தென்னாப்பிரிக்காவில் கடந்த சில தினங்களுக்கு முன் பி.1.1.529 என்று அடையாளம் காணப்பட்டது.இதனைத் தொடர்ந்து தென்னாப்பிரிக்கா மற்றும் பிற நாடுகளில் இருந்து வரும் சர்வதேச பயணிகளை கடுமையாக பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

தற்போது இந்தியாவில் இதுவரை புதிய வகை உருமாற்ற கொரோனா எதுவும் இதுவரை பதிவாகவில்லை என்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.

புதிய வகை உருமாற்ற கொரோனா வைரஸ் :

  • B.1.1.529 என பெயரிடப்பட்டுள்ள புதிய வகை உருமாறிய கொரோனா ,புரத கூர்முனைகளில் அதிக அளவில் மாற்றங்கள் ஏற்படுத்துவது தடுப்பூசிக்கு எதிராக போராடும் அதன் தன்மையை அதிகரிக்கிறது. மேலும் இதன் பரவல் தன்மை அதிகரித்து தீவிரமான அறிகுறிகளுக்கு வழிவகுக்கும் என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
  • புதிய வகை கொரோனாவில் மொத்தமாக 50 மாற்றங்கள் தென்பட்டுள்ளது. அதில், 30க்கும் மேற்பட்ட மாற்றங்கள் புரத கூர்முனைகளில் கண்டறியப்பட்டுள்ளது. தற்போது செலுத்தப்பட்டுவரும் கொரோனா தடுப்பூசியின் இலக்காக இந்த புரத கூர்முனைகளே உள்ளன. உடலில் உள்ள அணுக்களை கடந்து உள் புகுவதற்கு இந்த புரத கூர்முனைகளையே வைரஸ் பயன்படுத்துவது குறிப்பிடத்தக்கது.

Next Post

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா நிலவரம்..

Fri Nov 26 , 2021
தமிழகத்தில் கொரோனா பாதிப்பானது படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது.தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 746 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 808 பேர் குணம் அடைந்துள்ளனர்.தமிழகத்தில் மொத்த பலி எண்ணிக்கை 36,443 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 11 பேர் பலியாகியுள்ளனர். தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 120, […]
district-wise-corona-updates-26-11-2021
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய