
ஆப்ரிக்கா நாடான போட்ஸ்வானாவில் புதிய உருமாறிய கரோனா வைரஸ் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இது ஆராய்ச்சியாளர்களைக் கவலை கொள்ளச் செய்துள்ளது. B.1.1529 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த உருமாறிய கொரோனா வைரஸ் தனது ஸ்பைக் புரதத்தில் 32 மாற்றங்களைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கொரோனா வைரசில் இந்தளவுக்கு புரோத ஸ்பைக்கில் மாற்றங்கள் ஏற்படுவது இதுவே முதல்முறை என்பதால் இது ஆய்வாளர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. வைரசுக்கு வெளியே இருக்கும் புரோத ஸ்பைக் மூலமே அவை மனித செல்களை பற்றிக்கொள்கிறது.
மேலும் ,இதில் ஏற்படும் சில மாற்றங்கள் வைரஸ் பரவலை அதிகரிக்கலாம். கடந்த நவம்பர் 11ஆம் தேதி இந்த உருமாறிய கொரோனா கண்டறியப்பட்ட நிலையில், அதன் பின்னர் தென் ஆப்பிரிக்கா, ஹாங்காக் நாடுகளுக்கு இந்த உருமாறிய கொரோனா பரவியுள்ளது பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.
ஐரோப்பியாவை பொறுத்தவரை இங்கிலாந்தில் 43,000 பேருக்கு, போலந்தில் 28,000 பேருக்கு, செக் குடியரசில் 25,000 பேருக்கு நெதர்லாந்தில் 24,000 பேருக்கும் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து அதிகரிக்கும் வைரஸ் பாதிப்பால் ஸ்லோவாக்கியா நாட்டில் இரண்டு வாரக் காலத்திற்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.