கொரோனா பாதிப்பினை வீட்டிலேயே கண்டறியும் புதிய கருவி : ICMR அனுமதி

கொரோனா தொற்றினை வீட்டிலிருந்தே கண்டறியும் ரேபிட் ஆன்டிஜன் டெஸ்ட் என்ற புதிய கருவிக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் அனுமதி அளித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் புனேவை சேர்ந்த மைலாப் டிஸ்கவேரி சொலுஷன்ஸ் என்ற நிறுவனம் கொரோனா தொற்றினை வீட்டிலேயே அறிந்துகொள்ளும் ரேபிட் ஆண்டிஜன் டெஸ்ட் கருவியை உருவாகியுள்ளது.

ரேபிட் ஆன்டிஜன் டெஸ்ட் கருவியின் மூலம் மூக்கில் உள்ள சளி மாதிரியை எடுத்து தொற்று இருப்பதை வீட்டிலேயே உறுதி செய்யும் வகையில் இந்த கருவி உருவாக்கப்பட்டுள்ளது.ஒரு பரிசோதனை கருவியின் விலையானது ரூ .250 ஆகும்.இந்த கருவியின் மூலம் 15 நிமிடங்களுக்குள் பரிசோதனை முடிவுகளை தெரிந்த்துக்கொள்ள முடியும்.

ரேபிட் ஆன்டிஜன் டெஸ்ட் சாதனத்தை யார் பயன்படுத்தலாம் ,எப்படி பயன்படுத்தலாம் என்று ICMR தெளிவான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.இதன்படி கொரோனா அறிகுறிகள் உள்ளவர்கள் மற்றும் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டோருடன் நேரடி தொடர்பில் இருந்தவர்கள் மட்டும் இக்கருவியை பயன்படுத்தலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ரேபிட் ஆன்டிஜன் டெஸ்ட் மூலம் ஒருவருக்கு தொற்று பாதிப்பு இருப்பது தெரியவந்தால் அது உறுதியாக பாசிட்டிவ் என்றே கருதப்படும் மீண்டும் பரிசோதனை தேவையில்லை என்றும் கூறப்பட்டுள்ளது .ஆனால் தொற்று அறிகுறிகள் இருந்து இந்த கருவி மூலம் சோதனை செய்து அதில் நெகட்டிவ் என வந்தால் தற்போது வழக்கமாக செய்யப்படும் ஆர்டிபிசிஆர் சோதனையை மேற்கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த பரிசோதனையை மேற்கொள்வதற்கு மொபைல் ஆப் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் கூறியுள்ளது.

Next Post

கொரோனா 2 வது அலை பரவலை தடுக்க புதிய வழிகாட்டு நெறிமுறைகள் : மத்திய அரசு வெளியீடு..

Thu May 20 , 2021
கொரோனாவின் இரண்டாவது அலையை முற்றிலுமாக தடுக்க நாடு முழுவதும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2 லட்சத்து 76 ஆயிரத்து 110 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் இலவசமாக தடுப்பூசிள் மத்திய அரசால் வழங்கப்பட்டு வருகிறது.கொரோனா 2 வது அலை பரவலை தடுக்க மத்திய அரசு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை தற்போது வெளியிட்டுள்ளது. நல்ல காற்றோட்ட […]
covid-2nd-wave-test
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய