
இந்தியா தற்போது கொரோனாவின் இரண்டாவது அலையை எதிர்நோக்கி வருகிறது.இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
தற்போது கொரோனாவின் இரண்டாவது அலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புதிய அறிகுறிகள் தென்படுவதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் அதிகம் பரவி வருகிறது.கொரோனா பாதிப்பால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு கண் எரிச்சல் மற்றும் சிவந்த கண்கள், வாயுத் தொல்லை, அடிவயிற்றில் வலி, படபடப்பு, காதடைப்பு உள்ளிட்ட பிரச்னைகளுக்கு அதிகமான நோயாளிகள் வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக தொற்று பாதித்தவர்களுக்கு வாயுப் பிரச்சனை ஏற்படுவதாகவும்,இது புது அறிகுறியாக மாறியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
கடந்த முறை கொரோனா தொற்றால் பாதித்தவர்களுக்கு அடிவயிற்றில் கடுமையான வலியும்,வயிற்றுப்போக்கும் 2 % பேருக்கு மட்டுமே ஏற்பட்டது ,ஆனால் தற்போது இந்த பாதிப்பு 50 % சதவிகிதமாக மாறியுள்ளது என ஆஸ்டர் சிஎம்ஐ மருத்துவமனை மருத்துவர் பிந்துமத் கூறியுள்ளார்.
உலகம் முழுவதும் பரவி வரும் புதிய உருமாறிய கொரோனா வைரஸ் அதிக பாதிப்பை ஏற்படுத்துவதாகவும், எளிதாக நுரையீரல் மற்றும் சுவாசப் பாதைகளை பாதிப்பதாகவும் மருத்துவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.