புதிய உருமாறிய ‘மு’ வைரஸ் : உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை..

‘மு’ என்று அழைக்கப்படும் புதிய உருமாறிய வைரஸ் தடுப்பூசிகளுக்கு தப்பி விடுகிற அறிகுறிகள் தென்படுவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.மேலும் தென் அமெரிக்காவிலும், ஐரோப்பியாவிலும் குறிப்பிட்ட பகுதிகளில் பெரிய அளவில் இந்த வைரஸானது வெளிப்பட்டுள்ளது.

இந்த புதிய உருமாறிய ‘மு’ வைரஸ் கடந்த ஜனவரி மாதம் தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் முதன்முதலாக காணப்பட்டது. இதன் உருமாறிய வடிவம் பி.1.621 ஆகும். எனவே இது ‘மு’ வைரஸ் என்று அழைக்கப்படுகிறது.

இந்த ‘மு’ வைரஸ் ஆனது இங்கிலாந்து, அமெரிக்கா, ஹாங்காங்கிலும் குறிப்பிட்ட பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த வைரசை உலக சுகாதார அமைப்பு உன்னிப்பாக கவனித்து வருகிறது.தற்போது இதன் பரவல் விகிதம் 0.1 சதவீதத்துக்கு குறைவாகவே இருப்பதாக தெரிய வந்துள்ளது. அதே நேரத்தில் கொலம்பியாவில் 39 சதவீதமும், ஈக்குவடாரில் 13 சதவீதமும் உள்ளது. மேலும் இந்த வைரஸ் தற்போது தொடர்ந்து அதிகரித்தும் வருகிறது.

சுமார் 39 நாடுகளில் காணப்படும் இந்த வைரஸ்,நோய் எதிர்ப்புக்கு தப்பிக்கும் சாத்தியமான பண்புகளைக் கொண்டிருப்பதை, தடுப்பூசிக்கு தப்பி விடும் அறிகுறிகளாக உலக சுகாதார அமைப்பு கண்டு எச்சரித்துள்ளது.எனினும் இந்த வைரஸை உறுதி செய்ய மேலும் ஆராய்ச்சிகள் தேவைப்படுவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

Next Post

தொழிற்கல்வி படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு : தமிழக அரசு அரசாணை வெளியீடு..

Fri Sep 3 , 2021
பொறியியல், சட்டம் உள்ளிட்ட தொழிற்கல்வி படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டம் நடப்பாண்டிலேயே நடைமுறைக்கு வரும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தற்போது, நடப்பு கல்வியாண்டிலேயே அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டம் நடைமுறைக்கு வரும் வகையில் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உள் ஒதுக்கீட்டு சலுகையைப் பெற மாணவா்கள் ஆறாம் வகுப்பு […]
tamilnadu-government
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய