10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் புதிதாக ‘பயிற்று மொழி’சேர்ப்பு: அரசு தேர்வுத்துறை அறிவிப்பு..

நடப்பு கல்வி ஆண்டிற்க்கான 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் புதிதாக பயிற்று மொழி சேர்க்கப்படுவதாக அரசு தேர்வுத்துறை இயக்குநர் சேதுராமவர்மா தற்போது அறிவித்துள்ளார்.

1 முதல் 10-ம் வகுப்பு வரை மாணவர்கள் எந்த பயிற்று மொழியில் பயின்றனர் என்ற விவரம் வகுப்பு வாரியாக சேர்க்கப்பட உள்ளது என தெரிவித்தார். மாணவர்கள் பயிற்று மொழி விவரங்களை தனித்தனியே இணையத்தளத்தில் பதிவு செய்ய தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களுக்கு அரசுப் பணிகளில் 20% இடஒதுக்கீடு என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் புதிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Next Post

கல்லூரிகளில் வாரத்துக்கு 6 நாட்கள் நேரடி வகுப்பு கட்டாயம் - உயர்கல்வித்துறை..

Mon Nov 22 , 2021
பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் சுழற்சி முறையில் இல்லாமல் வாரத்திற்கு 6 நாட்கள் நேரடி வகுப்புகள் கட்டாயம் நடத்த வேண்டும் என்று உயர்கல்வித் துறைச் செயலாளர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார். ஜனவரி 20 முதல் நேரடி செமஸ்டர் தேர்வுகள், அதற்கு முன் மாதிரி செமஸ்டர் தேர்வுகள் நடத்தவும் உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மாணவர்களுக்கு பாடங்களை நினைவூட்டி உரிய பாடத்திட்டத்தை வழங்கவும் பல்கலைக்கழகங்கள் , கல்லூரிகளுக்கு உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
colleges-conduct-6-days-in-weekly
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய