கிராமங்களில் கொரோனா பரவலை தடுக்க புதிய வழிகாட்டுமுறைகள் – மத்திய அரசு வெளியீடு..

இந்தியா முழுவதும் தீவிரமாக பரவத் தொடங்கிய கொரோனா தொற்று ,தற்போது சற்றே குறைந்த நிலையில் உள்ளது.நகர்ப்புறங்களில் அதிகளவில் பரவிய கொரோனா, தற்போது கிராமப்புறங்களை நோக்கி பரவத் தொடங்கியுள்ளது.கிராமங்கள் மற்றும் சிறு நகரங்களில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதை அடுத்து,மத்திய அரசு ஊரக அளவிலான புதிய கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

அனைத்து கிராமங்களிலும் கிராம சுகாதார கமிட்டி உதவியுடன் அங்கீகரிக்கப்பட்ட சமூக சுகாதார பணியாளர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும்.

  • கிராமங்களில் அறிகுறிகள் உள்ள நோயாளிகளுக்கு, சமூக சுகாதார அதிகாரிகள், ‘ஆன்லைன்’ வாயிலாக மருத்துவ ஆலோசனைகள் வழங்க வேண்டும்.
  • இணை நோய்கள் மற்றும் ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறைவாக உள்ளவர்களை சிகிச்சை மையங்களில் அனுமதித்து கண்காணிக்க வேண்டும்.
  • அனைத்து கிராமங்களிலும் தேவையான அளவு, ‘பல்ஸ் ஆக்ஸிமீட்டர்’ மற்றும் ‘தெர்மாமீட்டர்’ கருவிகள் கையிருப்பு இருக்க வேண்டும். மேலும் ஒவ்வொரு கிராமத்திலும் கிராம சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து அமைப்பினரின் உதவியுடன், அங்கீகரிக்கப்பட்ட சமூக சுகாதார பணியாளர்கள் அனைவரும் கடுமையான சுவாச தொற்று இருக்கிறதா என்று தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.
  • வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்பவர்களுக்கு தேவையான மருந்துகளை வழங்க வேண்டும் .மேலும்,அவர்களுக்கு உடல் நலம் குன்றினால், தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் உள்ளிட்ட முழு விவரங்களை கட்டாயம் அளித்தல் வேண்டும்.
  • வீட்டு தனிமையில் உள்ளவர்கள், தொற்று அறிகுறி ஏற்பட்ட 10 நாட்களுக்கு பின், காய்ச்சல் இல்லையெனில், வீட்டு தனிமையை முடித்துக் கொள்ளலாம். அதன் பின், மீண்டும் கொரோனா பரிசோதனை தேவையில்லை.

Next Post

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா நிலவரம் ..

Mon May 17 , 2021
தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருவதால் பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்து வருகிறது. இதன் காரணமாக இன்று முதல் மாவட்டங்களுக்கு உள்ளேயும் ,வெளியேயும் பயணிக்க இ-பதிவு முறை இன்று முதல் கட்டாயமாக்கப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா தொற்றை தடுப்பதற்கு அனைத்து மாவட்டங்களிலும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.தற்போது மாவட்ட வாரியாக உள்ள கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை..
district-wise-corona-status-16-5-21
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய