
கொரோனாவின் இரண்டாவது அலையை முற்றிலுமாக தடுக்க நாடு முழுவதும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2 லட்சத்து 76 ஆயிரத்து 110 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் இலவசமாக தடுப்பூசிள் மத்திய அரசால் வழங்கப்பட்டு வருகிறது.கொரோனா 2 வது அலை பரவலை தடுக்க மத்திய அரசு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை தற்போது வெளியிட்டுள்ளது.
- நல்ல காற்றோட்ட வசதி கொரோனா பரவலை குறைக்கும்.
- ஜன்னல் கதவுகளை திறந்து வைக்க வேண்டும், எக்ஸாஸ்ட் மின்விசிறியை பயன்படுத்துதல் வேண்டும்
- வெளிகாற்று வரும் வகையில் வீடு, அலுவலக அறைகளை வைத்திருக்க வேண்டும்.
- வீடு, அலுவலகங்களில் காற்றோட்ட வசதி நம்மை பாதுகாக்கும்.
- முகக்கவசம், தனிநபர் இடைவெளி, கிருமி நாசினி உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளுடன் காற்றோட்ட வசதியையும் இணைத்து மத்திய அரசு அறிவித்துள்ளது.