புதிய கல்விக் கொள்கை : நாட்டிலேயே முதல்முறையாக கர்நாடகாவில் அமல்..

நாட்டிலேயே முதல்முறையாக கர்நாடகாவில் புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

புதிய கல்விக் கொள்கையை வெற்றிகரமாக்க வேண்டுமெனில், அதை மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் கொண்டு சேர்க்க வேண்டும். புதிய டிஜிட்டல்மயமாக்கப்பட்ட கொள்கையைக் கல்விக்கென உருவாக்க வேண்டும். தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் கல்வியாளர்களின் உதவியுடன் இது ஒவ்வொரு கிராமத்திலும் சாத்தியமாக்கப்பட வேண்டும் என்று கர்நாடக முதல்வர் தெரிவித்துள்ளார்.

புதிய கல்விக் கொள்கையின்படி, ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சித் திட்டம் உருவாக்கப்பட வேண்டும்.மேலும் புதிய ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சித் திட்டம் ஒவ்வொரு கிராமமும் பள்ளியும் பல்கலைக்கழகமும் அணுகும் வகையில் இருக்க வேண்டும். ஒவ்வொரு கன்னடிகாவும் அறிவு சார்ந்தவராக இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

Next Post

கொரோனா தடுப்பூசி செலுத்த வாட்ஸ்ஆப் மூலம் முன்பதிவு செய்யும் முறை அறிமுகம்..

Tue Aug 24 , 2021
கொரோனா தடுப்பூசி செலுத்த வாட்ஸ்ஆப் மூலம் முன்பதிவு செய்யும் முறையை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தனது சுட்டுரைப் பக்கத்தில் செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தியுள்ளார். நாடு முழுவதும் இதுவரை தடுப்பூசி செலுத்துவதற்கு https://www.cowin.gov.in/ என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், பதிவு செய்யும் முறையை மிகவும் எளிமையாக்கும் விதமாக ‘வாட்ஸ்ஆப்’ மூலம் முன்பதிவு செய்யும் முறை இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இதுவரை 58 கோடிக்கும் […]
covid-vaccine-register-via-whatsapp
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய