இந்தியாவில் புதிய ‘இருமுறை உருமாறிய கொரோனா’ கண்டுபிடிப்பு..

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில்,இந்தியாவில் புதிய ‘இருமுறை உருமாறிய கொரோனா’ கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்சாகாக் என்ற 10 தேசிய ஆய்வுக்கூடங்கள் கொண்ட குழுமத்தை உருவாகியுள்ளது .இந்த ஆய்வுக்கூடங்களில் கொரோனா வகைகளை மரபணு வரிசைப்படுத்தும் ஆய்வானது நடந்து வருகிறது.

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலிருந்து சுமார் 10,787 கொரோனா உறுதி செய்யப்பட்ட மாதிரிகள் இன்சாகாக் ஆய்வு கூடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டது.இதில் ,771 உருமாறிய கொரோனாவை இன்சாகாக் குழுமம் கண்டுபிடித்துள்ளது.இதில் 736 மாதிரிகள் இங்கிலாந்து உருமாறிய கொரோனாவையும் மற்றும் 34 மாதிரிகள் தென்ஆப்பிரிக்க உருமாறிய கொரோனாவையும் கொண்டுள்ளது.

இந்திய மாநிலங்களிலிருந்து அனுப்பி வைத்த மாதிரிகளில், புதிய ‘இருமுறை மரபணு உருமாறிய கொரோனா’ கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வகை கொரோனா, நோய் எதிர்ப்பு சக்திக்கு கட்டுப்படாதவை, இவை தொற்றை அதிகப்படுத்தக்கூடியவை.இந்தியாவில் மராட்டியம், கேரளா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் இருந்து பெறப்பட்ட கொரோனா மாதிரிகளில் மரபணு உருமாறிய கொரோனா கண்டறியப்பட்டுள்ளன. இங்கிலாந்து, டென்மார்க், சிங்கப்பூர், ஜப்பான், ஆஸ்திரேலியா உள்பட 16 நாடுகளிலும் இவை கண்டறியப்பட்டுள்ளன.

Next Post

இந்தியாவில் புதிய உச்சத்தை தொட்ட கொரோனா : ஒரே நாளில் புதிதாக 53,476 பேருக்கு தொற்று..

Thu Mar 25 , 2021
நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 53,476 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.தற்போது உலகளவில் கொரோனா பாதிப்பானது 12.54 கோடியை தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது .இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பில் இருந்து 26,490 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இன்று காலை நிலவரப்படி, இந்தியா முழுவதும் புதிதாக 53,476 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன்மூலம் நாடு முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,17,87,534 ஆக அதிகரித்துள்ளது […]
coronavirus-reached-new-high-in-india
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய