நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 34,403 பேருக்கு கொரோனா..

நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 34,403 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இது நேற்றைய பாதிப்பை விட சற்று அதிகம் ஆகும்.இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,33,81,728 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 3,595, தமிழ்நாட்டில் 1,693, ஆந்திராவில் 1,367, கர்நாடகாவில் 1,108, மிசோரத்தில் 1,171 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பாதிப்புக்கு ஒரே நாளில் 320 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் நாடு முழுவதும் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,44,248 ஆக உள்ளது.இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,38,322 பேர் அடங்குவர்.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின் படி, இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,25,98,424 ஆக உள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 37,950 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 3,39,056 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. நாடு முழுவதும் இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 76 கோடியே 57 லட்சத்தை கடந்துள்ளது.நாடு முழுவதும் நேற்று 63,97,972 தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டுள்ளது.

கொரோனாவின் இரண்டாவது அலை படிப்படியாக குறைந்து வந்தாலும், கொரோனா தடுப்பு விதிகளை மக்கள் முறையாக கடைப்பிடிக்காவிட்டால் மூன்றாவது அலை ஏற்படும் அபாயம் உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

Next Post

ஆசிரியர்களுக்கான ஐந்தாம் கட்ட ICT பயிற்சிக்கான அறிவிப்பு வெளியீடு..

Fri Sep 17 , 2021
அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு செப். 22,23,24,27,28 ஆகிய 5 நாட்கள் 5ஆம் கட்ட எளிய கணினி பயிற்சி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 21 அன்று பயிற்சிக்கான பள்ளியினை தேர்வு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி – 2021-22 ஆம் கல்வியாண்டில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இணைய வழியாக அடிப்படை கணினி பயன்படுத்துதல் , EMIS , மற்றும் Hi – Tech Lab ஆகியவற்றில் திறன் […]
ICT-training-for-Teachers
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய