இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 31,923 பேருக்கு கொரோனா தொற்று..

நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 31,923 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.நேற்று முன் தினம் 26,115 நேற்று 26,964 என பதிவான நிலையில் இன்று 31,923 பேருக்கு பாதிப்பு உறுதியானது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,35,63,421 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்று பாதிப்புக்கு ஒரே நாளில் 282 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் நாடு முழுவதும் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,46,050 ஆக உள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின் படி, இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,28,15,731 ஆக உள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 31,990 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 3,01,640 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. நாடு முழுவதும் இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 83,39 கோடியை கடந்துள்ளது.நாடு முழுவதும் நேற்று 71,38,205 தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டுள்ளது.குறிப்பாக தமிழகத்தில் இதுவரை 4,35,08,265 கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

கொரோனாவின் இரண்டாவது அலை படிப்படியாக குறைந்து வந்தாலும், கொரோனா தடுப்பு விதிகளை மக்கள் முறையாக கடைப்பிடிக்காவிட்டால் மூன்றாவது அலை ஏற்படும் அபாயம் உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

Next Post

குழந்தைகளுக்கு கோவேக்சின் தடுப்பூசி : இறுதிகட்ட பரிசோதனை நிறைவு..

Thu Sep 23 , 2021
18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கோவேக்சின் தடுப்பூசியை செலுத்தும் பரிசோதனை தற்போது நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம் பெரியவர்களுக்கான கோவேக்சின் தடுப்பூசியை தயாரித்து வினியோகித்து வருகிறது. இந்நிலையில் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான கோவேக்சின் தடுப்பூசியையும் இந்த நிறுவனம் உருவாகியுள்ளது. இந்த தடுப்பூசியை குழந்தைகளுக்கு செலுத்தி பரிசோதிக்கும் 2, 3-ம் கட்ட பரிசோதனை முடிந்துள்ளது. குழந்தைகளுக்கான பீடியாட்ரிக் கோவேக்சின் தடுப்பூசி தற்போதுதான் 2, 3-ம் கட்ட பரிசோதனையை நடத்தி […]
COVAXIN-vaccination-for-child
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய