இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 46,164 பேருக்கு கொரோனா தொற்று..

இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை ஓய்ந்து வந்த நிலையில், கடந்த ஓரிரு நாட்களாக தினசரி பாதிப்பு ஏறுமுகமாக உள்ளது.நேற்று சுமார் 25 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், இன்றைய பாதிப்பு சற்று அதிகமாக உயர்ந்துள்ளது.

நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 46,164 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,25,58,530 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்று பாதிப்புக்கு ஒரே நாளில் 607 பேர் உயிரிழந்துள்ளனர்.. இதனால் நாடு முழுவதும் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,36,365 ஆக உள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின் படி, இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,17,88,440 ஆக உள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 34,159 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 3,33,725 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. நாடு முழுவதும் நேற்று வரை பொதுமக்களுக்கு 60,38,46,475 கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

கொரோனாவின் இரண்டாவது அலை படிப்படியாக குறைந்து வந்தாலும், கொரோனா தடுப்பு விதிகளை மக்கள் முறையாக கடைப்பிடிக்காவிட்டால் மூன்றாவது அலை ஏற்படும் அபாயம் உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

Next Post

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிப்பு : போர்ச்சுக்கல் ஆராய்ச்சியாளர்கள் அறிவிப்பு..

Thu Aug 26 , 2021
கொரோனவுக்கான மருந்தை போர்ச்சுக்கல் ஆராய்ச்சியாளர்கள் தற்போது கண்டுபிடித்துள்ளனர்.வைரஸ் செயல்பாட்டை குறைக்க ‘என்எஸ்பி 14’ என்ற வைரஸ் புரதத்தில் இந்த மருந்துகளின் கலவை செயல்படும்” என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். லிஸ்பன் நோவா பல்கலைக்கழகத்தின் அங்கமான ரசாயன மற்றும் உயிரியல் தொழில்நுட்ப நிறுவனத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், 3 மருந்துகளின் கலவையானது கொரோனா நகலெடுப்பை குறைக்கும் என்று கூறுகின்றனர். ஆராய்ச்சியாளர் சிசிலியா அர்ரியானோ கூறுகையில், “இந்த மருந்துகளால் வைரஸ் நகலெடுப்பது 50 சதவீதம் மட்டுமே […]
corona-virus-medicine-invention
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய