இந்தியாவில் புதிதாக 18,599 பேருக்கு கொரோனா தொற்று : மத்திய அமைச்சகம் ..

நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கமானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது .இந்தியா முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 18,599 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது .

மத்திய அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் ,இன்று காலை நிலவரப்படி புதிதாக 18,599 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது .இதன்மூலம் நாடு முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,12,29,398 ஆக அதிகரித்துள்ளது உள்ளது .தற்போது இந்தியாவில் கொரோனாவின் தாக்கமானது தீவிரத்தை அடைந்து வருகிறது .

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின்(ICMR) புள்ளிவிவரப்படி ,இதுவரை கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,08,82,798 ஆக உள்ளது.கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கையானது 1,57,853 ஆக உள்ளது.

இந்தியா முழுவதும் தற்போது கொரோனவுக்காக 1,88,747 பேர் சிகிச்சைப்பெற்று வருவதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது .

Next Post

தட்டச்சு ,சுருக்கெழுத்து மற்றும் கணக்கியல் தேர்வுகள் அறிவிப்பு : தொழில்நுட்ப கல்வித் துறை..

Tue Mar 9 , 2021
தொழில்நுட்பக் கல்வித் துறையானது தட்டச்சு ,சுருக்கெழுத்து மற்றும் கணக்கியல் போன்ற துறைகளுக்கான தேர்வானது ஏப்ரல் மாதம் நடைபெறும் என அறிவித்துள்ளது . நடப்பாண்டிற்கான தட்டச்சு, சுருக்கெழுத்து மற்றும் கணக்கியல் தேர்வுகள் ஏப்ரல் மாதம் நடத்தப்பட உள்ளதாக தொழில்நுட்பத் தேர்வுகள் வாரியத்தின் தலைவர் கே.விவேகானந்தன் அவர்கள் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார் . தேர்வுக்கான விண்ணப்பப் படிவத்தை www.tndte.gov.in/site என்ற தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மேலும் தகவல்களை […]
typewriting-exam-2021
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய