
நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 12,286 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது 91 ஆக உள்ளது .
இன்று காலை 8 மணி நிலவரப்படி (கடந்த 24 மணி நேரத்தில்) ,புதிதாக 12,286 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .இதன்மூலம் நாடு முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கையானது 1,11,24,527 ஆக உள்ளது .
இதுவரை கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கையானது 1,07,98,921 ஆகவும் ,கொரோனா பாதிப்பின் காரணமாக உயிரிழந்தவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கையானது 1,57,248 ஆக உள்ளது .
நாடு முழுவதும் தற்போது கொரோனவுக்காக 1,68,358 பேர் சிகிச்சைப்பெற்று வருகின்றனர் .நேற்று மாலை (திங்கட்கிழமை) நிலவரப்படி நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி 1,48,54,136 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளதாகவும் மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது .