கொரோனாவுக்கு எதிரான போரில் பங்கேற்கும் கோர்பேவாக்ஸ் தடுப்பூசி ..

இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதன் காரணமாக நாட்டில் கொரோனா தடுப்பூசியின் தேவை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஐதராபாத்தை சேர்ந்த பயோலாஜிக்கல்-இ என்ற நிறுவனம் உருவாக்கி உள்ள தடுப்பூசி மீதான எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது.

கோர்பேவாக்ஸ் தடுப்பூசியானது உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசியாகும் . இதன் முதல் கட்டம் மற்றும் 2வது கட்ட பரிசோதனைகளில் நம்பிக்கைக்குரிய முடிவுகளைக் கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இவை தற்போது 3 வது கட்ட மருத்துவ பரிசோதனையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

‘பயோலாஜிக்கல்-இ நிறுவனம் உருவாக்கி உள்ள கோர்பேவாக்ஸ் என்ற தடுப்பூசியானது, நோவாவாக்ஸ் தடுப்பூசியைப் போன்றது. கொரோனாவுக்கு எதிராக 90 சதவீதம் செயல்திறன் கொண்டதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது கொரோனாவுக்கு எதிரான போரில் முக்கிய பங்கு வகிக்கும். கேம் சேஞ்சராகவும் இருக்கலாம் என்று தேசிய நோய்த் தடுப்பு தொழில்நுட்ப ஆலோசனைக் குழு தலைவர் என்.கே.அரோரா கூறியுள்ளார்.

தற்போது கோர்பேவாக்ஸ் தடுப்பூசி மருந்தின் மூன்றாம் கட்ட பரிசோதனையானது தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மருந்து அக்டோபர் மாதம் முதல் பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Post

இந்தியாவில் இன்றைய கொரோனா நிலவரம் - ஒரே நாளில் 62,480 பேருக்கு தொற்று உறுதி ..

Fri Jun 18 , 2021
இந்தியாவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று தொடர்ந்து குறைந்து வருகிறது.கொரோனா பாதிப்பு குறைந்ததையடுத்து அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகள் மெல்ல மெல்ல தளர்த்தப்பட்டு இயல்புநிலைக்கு திரும்புகின்றன. இந்தியா முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 62,480 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .மொத்த பாதிப்பு 2,97,62,793 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பால் நேற்று இந்தியாவில் ஒரே நாளில் 1,587 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின் படி, […]
corona-cases-in-india
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய