இந்தியாவில் இன்றைய கொரோனா நிலவரம் : புதிதாக 27,176 பேருக்கு தொற்று..

நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 27,176 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இது முந்தைய நாள் (25,404) பாதிப்பை விட சற்று அதிகம் ஆகும்.இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,33,16,755 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்று பாதிப்புக்கு ஒரே நாளில் 284 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் நாடு முழுவதும் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,43,497 ஆக உள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின் படி, இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,25,22,171 ஆக உள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 38,012 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 3,51,087 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. நாடு முழுவதும் இதுவரை செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 75 கோடியே 89 லட்சத்து 12 ஆயிரத்து 277 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவின் இரண்டாவது அலை படிப்படியாக குறைந்து வந்தாலும், கொரோனா தடுப்பு விதிகளை மக்கள் முறையாக கடைப்பிடிக்காவிட்டால் மூன்றாவது அலை ஏற்படும் அபாயம் உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

Next Post

கொரோனா பரவலை தடுக்க 6 அடி தனிமனித இடைவெளி போதாது - புதிய ஆய்வில் தகவல்..

Wed Sep 15 , 2021
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தனிமனித இடைவெளியை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என்று கூறப்பட்டு வருகிறது.இந்நிலையில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், மூடப்பட்ட அறைகளில் காற்றில் மிதந்து வரும் வைரசில் இருந்து பாதுகாக்க, இரு நபர்களுக்கு இடையிலான 2 மீட்டர் (ஆறரை அடி) இடைவெளி போதுமானதாக இருக்காது என்று தெரியவந்துள்ளது. மேலும் காற்றோட்டத்தின் அளவு மற்றும் வீதம், வெவ்வேறு காற்றோட்ட உத்திகளுடன் தொடர்புடைய உட்புற காற்று ஓட்ட முறை மற்றும் திரவத்துளி […]
corona-spread-in-india
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய