இந்தியாவில் இன்றைய கொரோனா நிலவரம் : புதிதாக 15,786 பேருக்கு கொரோனா தொற்று..

இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு சரிந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 15,786 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,41,43,236 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்று பாதிப்புக்கு ஒரே நாளில் 231 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் நாடு முழுவதும் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,53,042 ஆக உள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின் படி, இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,35,14,449 ஆக உள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 18,461 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,75,745 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. நாட்டில் நேற்று ஒருநாளில் மட்டும் 6.27.277 கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இந்தியாவில் இதுவரை 100.59 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன.

Next Post

பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் திறனறித் தேர்வு..

Fri Oct 22 , 2021
பள்ளி மாணவர்களிடையே இளம் விஞ்ஞானிகளைத் தேடும் அறிவியல் திறனறித் தேர்வு வரும் நவம்பர் 30, டிசம்பர் 5 ஆகிய தேதிகளில் நடக்கிறது. இத்தேர்வில் பங்கேற்க வரும் அக்டோபர் 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். பள்ளி மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தைத் தூண்டவும் புதிய கண்டுபிடிப்புகளில் அவர்கள் ஈடுபட வழிகாட்டவும் இந்தத் தேர்வு மிகவும் உதவியாக இருக்கும். ஆறாவது வருடமாக இந்தாண்டு தேர்வு நடைபெறுகிறது. இதில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் அறிவியல் விஞ்ஞானிகளுடன் உரையாடுவதற்கும் […]
science-talented-exam-for-school-children
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய